சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சேலத்தை சேர்ந்த ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தை சோ்ந்தவர் வின்சி புளோரா(26). சென்னையில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் இவர், மடிப்பாக்கம் குபேரன் நகரில் வசித்து வருகிறார். இந்த அவரது வீட்டில் திடீரென கேஸ் சிலிண்டர் காலியாகிவிட்டதால், தன்னுடன் பணிபுரியும் மணிகண்டன் என்பவரிடம் சிலிண்டர் கொண்டுவந்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதையடுத்து சிலிண்டர் கொண்டுவந்த மணிகண்டன், இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியது.

பலத்த சத்தம் வந்ததையடுத்து, அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது, மணிகண்டன், வின்சி புளோரா இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், இருவரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். 60 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று இரவு வின்சி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், மணிகண்டனும் 45% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Readmore: குட்நியூஸ்!. மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லையா?. துணை முதல்வர் கொடுத்த அப்டேட்!