குமாரபாளையம் ராஜம் தியேட்டர் அருகே கஞ்சா விற்பனை செய்து வந்த 55 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் இளைஞர்கள் பலரும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். போதைப்பொருள் விற்பனையை தடுக்க காவல்துறையினர் பல்வேறு முயற்சிகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் குறைந்தபாடில்லை. தினந்தோறும் கஞ்சா விற்றவர் கைது, கஞ்சா போதையில் தகராறு செய்தவர்கள் கைது என பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார், நேற்று அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ராஜம் தியேட்டர் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த தங்கமணி (55) என்பதும், இவர் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கஞ்சாவை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
Read More : குரூப் 1, 1ஏ தேர்வு எப்போது..? தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி..!! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!