விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் நிலையில் உற்பத்தி செலவு இந்த ஆண்டு 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக சிலை தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், களிமண்ணிலும் காகித தூள்களிலும் கலைவண்ணமைக்க விநாயகர் சிலைகளை வடித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சிலை கலைஞர்கள் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் 7-ம்தேதி கொண்டாடப்படும் நிலையில் அயராது உழைத்து வருகின்றனர்.
சிலை வடிவமைப்போர், மாலை கட்டுவோர், கூடாரம் அமைப்போர், மைக் செட் கட்டுவோர் என இந்த பண்டிகை காலத்தில் ஒரு வியாபார சங்கிலி இருக்கிறது. மேலும், சிலை தயாரிப்பாளர்கள் 30 சென்டிமீட்டர் முதல் 10 அடி உயரம் வரை உள்ள சிலைகளை தயாரித்து வருகின்றனர். காகித தோல், ஓடைக்கல் மாவு, கிழங்கு பசை உள்ளவற்றை கொண்டு சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படாத வகையில் சிலைகளை மும்முரமாக தயார் செய்து வருகின்றன, மேலும், தொடர் மழை காரணமாக குளம் குட்டைகள் நிரம்பி இருப்பதால் களிமண் எடுக்க முடியாத நிலை இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து பணியாட்கள் கிடைப்பதில் பிரச்சனை இருப்பதால் உரிய நேரத்தில் பணிகளை முடிக்க அதிக சிரமத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர். மேலும், மின்கட்டண உயர்வு என்பது இந்த ஆண்டு உற்பத்தி செலவையும் அதிகரித்து விட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மூலப்பொருள் மின்கட்டணம் போன்றவற்றில் சலுகை கிடைத்தால் தங்களது வாழ்வாதார மேம்படும் என்கிறார்கள சிலை உற்பத்தியாளர்கள்.
Read More : சந்திரயான் மூலம் வெளிவந்த பல அறியப்படாத புதிய தகவல்..!! என்னவா இருக்கும்…?