நாடு முழுவதும் நேற்று (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வடிவங்களால் ஆன விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட்டனர். இதையடுத்து, சிலைகளை காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம். குறிப்பாக சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி ஆற்றுக்கு விநாயகர் சிலைகளை கொண்டு வந்து கரைத்துச் செல்வர். அந்தவகையில், எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, திருச்செங்கோடு, இளம்பிள்ளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளும், புறநகரில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த சிலைகளும் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

இதையடுத்து, எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி சந்தை திடல் அருகே உள்ள காவிரி படித்துறை, கூடகல், குப்பனூா் உள்ளிட்ட காவிரிகரை பகுதிகளில் ஏராளமான விநாயகா் சிலைகளை பக்தா்கள் ஆற்றில் கரைத்து பின்னர் புனித நீராடினா். இதையொட்டி கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

Read More: தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம்..!! அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விஜய்..!!