விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஷிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ”மேடையுடன் சேர்த்து 10 அடிக்கும் மேல் விநாயகர் சிலைகளை வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அரசு துறையிடம் இருந்து உரிய அனுமதி பெற்று, பின்னர் ரசாயன கலவை இல்லாத சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும்.
ஒலிபெருக்கிகள் வைக்க அந்த அந்த பகுதியில் உள்ள காவல்நிலையங்களில் அனுமதி பெற வேண்டும். ஒலிபெருக்கிக்கு தேவையான மின்சாரம் எங்கிருந்து பெறப்படுகிறது என்பதையும் மின்வாரியத்திடம் தெரிவிக்க வேண்டும். பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகே சிலைகள் வைக்கக்கூடாது. பிற மத மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பக்கூடாது. சிலை வைக்கப்படும் இடங்கள் ஊர்வலம் செல்லும் பாதைகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
Read More : திருமணம் வரை சென்ற கள்ளக்காதல்..!! வீடு புகுந்து வெளுத்து வாங்கிய பெண்கள்..!! நடந்தது என்ன..?