சங்ககிரி அருகே அரசிராமணி குள்ளம்பட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஆயுதப்படை காவலர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி தலூகா அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியில் சிலர் பணம் கட்டி சீட்டுக்கட்டு விளையாடி வருவதாக தேவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தேவூர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முககுமார் தலைமையிலான போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.
குறிப்பாக, பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் ஈரோடு ஆயுதப்படை காவலர் வெள்ளரி வெள்ளியை சேர்ந்த ஜெயபால் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ஆயுதப்படை காவலர் உள்பட 8 பேரை கைது செய்த போலீசார், ஜாமீனில் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.11, 290 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Readmore: கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து!. சேலம் ஆசிரியைக்கு நிகழ்ந்த சோகம்!