தபால் நிலையங்களில் பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதோடு, வேறு சில சேவைகளும் பொதுமக்களுக்கு அங்கே கிடைக்கின்றன. அதுகுறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம். தற்போது, 442 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் பாஸ்போர்ட் சேவைகளை வழங்கி வருகிறது.

பாஸ்போர்ட் சேவா கேந்திரா என்பது இந்தியாவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களின் விரிவாக்கப்பட்ட கிளை ஆகும். அடுக்கு 1 மற்றும் 2 நகரங்களில் பாஸ்போர்ட் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளை வழங்குவதற்கு இந்த அலுவலகங்கள் பொறுப்பாகும். கூடுதலாக, அவர்கள் ஆன்லைன் சேவைகளை வழங்குகிறார்கள், இதன் மூலம் ஏஜென்ட்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்படுகிறது. இது பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பாதுகாப்பானதாகவும், வெளிப்படையாகவும்,விரைவாகவும் ஆக்குகிறது.

வழக்கமான சேமிப்பு வித்ட்ராயல்களுக்கு இந்த அக்கவுண்ட்டை நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கான மினிமம் பேலன்ஸ் 500 ரூபாய் மற்றும் அடிப்படை சேவிங்ஸ் அக்கவுண்ட் ஆக இருந்தால் மினிமம் பேலன்ஸ் பூஜ்ஜியமாக இருக்கும். இதில் ATM, இன்டர்நெட் மற்றும் மொபைல் பேங்கிங், NEFT மற்றும் RTGS போன்ற வசதிகள் உண்டு. போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் இணைந்து UPI, IMPS போன்ற சேவைகளை வழங்குகிறது.

ரெக்கரிங் டெபாசிட் (RD): அதிக ரிஸ்க் இல்லாமல் கணிசமான நிதியை உருவாக்க விரும்பினால், போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம் உங்களுக்கான சிறந்த வாய்ப்பாக இருக்கும். சிறிய அளவிலான தொகையை முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்திற்கு பாதுகாப்பான நிதியை உருவாக்கும் வழியை வழங்குகிறது. இதில் குறைந்தபட்சமாக 100 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. இதற்கான கால அளவு 5 வருடங்கள். மேலும் இதனை கூடுதலாக 5 வருடங்கள் நீடித்துக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.

டைம் டெபாசிட் (TD): 1,2,3,5 வருடங்கள் இதற்கான மினிமம் டெபாசிட் 1000 ரூபாய், அதிகபட்ச டெபாசிட்டுக்கு வரம்பு எதுவும் கிடையாது. 5 வருட டைம் டெபாசிட்டில் முதலீடு செய்பவர்கள் வருமான வரி பலன்களை பெற்றுக் கொள்ளலாம். 5 வருடங்கள் நிறைவடைந்த பிறகு 2 முறை அக்கவுண்ட்டை நீடித்துக் கொள்வதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி கிடைக்கும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு வரிச்சலுகையும் உண்டு. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் ரூ.1.50 லட்சம் வரை வரிவிலக்கும் பெற முடியும்.

மாத வருமானம் திட்டம் (MIS): தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) வழக்கமான வருமானத்தை ஈட்டுவதற்கான சிறந்த வழி. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு நிலையான வருமான ஆதாரத்தைக் கொடுக்கிறது. இந்தத் திட்டம் ஒரு மொத்தத் தொகையை முதலீடு செய்து மாதந்தோறும் வட்டி மூலம் வருமானம் ஈட்ட அனுமதிக்கிறது. மாத வருமானம் பெற நினைப்பவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதன் குறைந்தபட்ச டெபாசிட் 1000 ரூபாயாகவும், அதிகபட்ச டெபாசிட் சிங்கிள் அக்கவுண்டுக்கு 9 லட்சம் ரூபாயும், ஜாயிண்ட் அக்கவுண்டுக்கு 15 லட்சம் ரூபாயும் ஆகும். இதன் கால அளவு 5 வருடங்கள்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: சீனியர் சிட்டிசன்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச டெபாசிட் 1000 ரூபாய் மற்றும் அதிகபட்ச டெபாசிட் 30 லட்சம் ரூபாய். இதன் கால அளவு 5 வருடங்கள் ஆகும். கால அளவு முடிந்த பிறகு கூடுதலாக 3 வருடங்கள் நீட்டித்துக் கொள்வதற்கான அனுமதியும் கிடைக்கிறது.

பப்ளிக் பிராவிடண்ட் பண்ட் (PPF): பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF) அல்லது பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு என்பது ஒரு பிரபலமான முதலீட்டு திட்டமாக அமைகிறது. ஓய்வு காலத்திற்குப் பிறகான வாழ்க்கையை சுமூகமாக மாற்றுவதற்கு இந்த திட்டம் பலருக்கு கை கொடுத்து வருகிறது. தற்போது இந்த திட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீடு, வட்டி மற்றும் மெச்சூரிட்டி தொகை போன்ற எதற்கும் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதற்கான குறைந்தபட்ச டெபாசிட் 500 ரூபாய், அதிகபட்ச டெபாசிட் ஒரு நிதியாண்டிற்கு 1,50,000 ரூபாய். இதற்கான கால அளவு 15 வருடங்கள் மற்றும் மேலும் நீட்டித்துக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் வரி பலன்கள் உண்டு.

சுகன்யா சம்ரிதி யோஜனா அக்கவுண்ட்: பெண் பிள்ளைகளுக்காக ஸ்பெஷல் ஆக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கான ஆரம்பகால குறைந்தபட்ச டெபாசிட் தொகை 250 ரூபாயாகவும், அதிகபட்ச டெபாசிட் 1,50,000 ரூபாயாகவும் உள்ளது. இந்தத் திட்டத்திற்கும் வரிப்பலன்கள் உண்டு. இதன் கால அளவு 21 வருடங்கள்.

தேசிய வருமான சான்றிதழ்: குறைந்தபட்ச டெபாசிட் 1000 ரூபாய் மற்றும் அதிகபட்ச டெபாசிட்டுக்கு வரம்பு கிடையாது. இந்த திட்டத்திற்கு வரிப்பலன்கள் உண்டு. இதன் கால அளவு 5 வருடங்கள். கிசான் விகாஸ் பத்திரம்: இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச டெபாசிட் 1000 ரூபாய் அதிகபட்ச வரம்பு கிடையாது. மெச்சூரிட்டியின் போது முதலீடு செய்த தொகை இரட்டிப்பாக மாறும்.

மகிளா சம்மன் சேவிங்ஸ் செர்டிபிகேட்: பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காகவே பிரத்தியேகமாக இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் 1, 2023 முதல் மார்ச் 31, 2025 வரை முதலீடு செய்யலாம். இதற்கான குறைந்தபட்ச முதலீடு 1000 ரூபாய் மற்றும் அதிகபட்ச முதலீடு 2 லட்ச ரூபாய். இந்த திட்டத்திற்கான கால அளவு 2 வருடங்கள்.

இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்: இது சேவிங்ஸ் மற்றும் கரண்ட் அக்கவுண்ட் ஆக கருதப்படுகிறது. இதற்கு வெர்சுவல் டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. இதில் பில்கள் மற்றும் யுட்டிலிட்டி பேமெண்ட்களை செலுத்தலாம். இந்த வங்கியின் கஸ்டமர்களுக்கு இன்சூரன்ஸ் சேவைகளும் வழங்கப்படுகிறது.

Readmore: குடும்பத் தகராறில் ஆற்றில் குதித்த தம்பதி!. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கர்ப்பிணி மனைவி மாயம்! வாழப்பாடியில் சோகம்!..