உடற்பயிற்சிகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. புதிதாக உடற்பயிற்சி செய்ய தொடங்குபவர்கள் எளிதாக கையாளக்கூடிய பயிற்சிகளை தேர்ந்தெடுப்பது முக்கியமானது. எந்த உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும் அது ஒட்டுமொத்த உடற் தகுதியையும் மேம்படுத்தும் விதமாகவும், இதய தசைகளை வலுப்படுத்தும் வகையிலும், உடல் எடையையும், எலும்பு அடர்த்தியையும் சீராக பராமரிக்கும் விதமாகவும், நீண்ட ஆயுளுக்கு வித்திடுவதாகவும் அமைய வேண்டும். அதற்கு ஏற்ற பயிற்சிகளாக ஓடுவதும், நடைப் பயிற்சி செய்வதும் அமைந்திருக்கின்றன. இவைகளில் எது சிறந்தது என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. எந்த பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வருவது நல்லது என்று பார்ப்போம்.
காலை எழுந்ததும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். முதுமை பருவத்தை எட்டுபவர்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இளம் வயதினர் ஜாக்கிங் போன்ற ஓட்டப்பயிற்சியை நாடுகிறார்கள். இதில் எந்த பயிற்சியை மேற்கொள்வது சிறந்தது என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. இரண்டு பயிற்சிகளுமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமானவை. குறிப்பாக இதயத்திற்கு சிறந்தவை.
வாக்கிங் என்பது எளிய உடற்பயிற்சியாக இருந்தாலும், இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், ஆயுளை நீடிக்க உதவுகிறது. உடல் இயக்கம் அதிகரித்தால், இதயம் மற்றும் சுவாச உறுப்புகள் நடைபயிற்சி மூலம் ஆரோக்கியமாக செயல்படுகின்றன. உடற்பயிற்சியின் போது நாம் அதிகம் சொக்காமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்வது முக்கியம். வாக்கிங் செய்வது மனநலத்துக்கு அமைதி அளிக்கிறது. இயற்கையில் நடக்கும்போது மனமும் உடலும் ஒருங்கிணைந்து, மன அழுத்தத்தை குறைத்து சுறுசுறுப்பை தருகிறது.
ரன்னிங் செய்வதில் பல சவால்கள் உள்ளன. காயம் ஏற்படும் அபாயமும் அதிகம். ஆனால், வாக்கிங் செய்யும் போது இது போன்ற ஆபத்துகள் குறைவாகவே இருக்கும். உடல் இளைப்பாறும் வேகத்தில் நடப்பதால், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். ஓடுவதை விட நடப்பது மன அழுத்தத்தை குறைக்க உதவும் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. ஓடும்போது இதய தசைகளில் அழுத்தம் ஏற்படும். அதே சமயம் நடப்பது இதயத்தில் மிக குறைந்த அழுத்தத்தை ஏற்படுத்தும். அகால மரணம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள்.
ரன்னிங் செய்வதில் பல சவால்கள் உள்ளன. காயம் ஏற்படும் அபாயமும் அதிகம். ஆனால், வாக்கிங் செய்யும் போது இது போன்ற ஆபத்துகள் குறைவாகவே இருக்கும். உடல் இளைப்பாறும் வேகத்தில் நடப்பதால், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். வாக்கிங் உடல் சீர்குலைவு, நீண்டகால நோய்கள் வராமல் தடுக்க உறுதுணையாக செயல்படுகிறது. உடலை பலப்படுத்தி நோய்களுக்கு எதிரான சக்தியை அதிகரிக்கிறது. நடைப்பயிற்சி ஆனது உங்களை அமைதியாகவும், மெதுவாகவும், வெற்றிகரமாகவும் திட்டமிட வைக்கிறது. இதன் காரணமாக உங்களின் உற்பத்தி திறனும் அதிகரிக்கிறது. வேலை அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு கூட, ஒரு எளிய நடைப்பயிற்சி ஆனது புதிய கண்ணோட்டங்கள் மற்றும் புதுமையான யோசனைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Read More : திமுக கூட்டணியில் ஊசலாட்டம்..!! 2026இல் விஜய் கட்சியுடன் கூட்டணி..? உறுதி செய்த திருமாவளவன்..!!