பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒவ்வொரு கஸ்டமர்களும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கும் புது விதிகளை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் – டிராய் (Telecom Regulatory Authority of India – TRAI) கொண்டுவரும் இந்த விதிகள் சிம் கார்டுகள், வங்கிகள் மற்றும் கஸ்டமர்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடியது. இந்த விதிகளால் என்னென்ன மாறப்போகிறது? பேங்க் மூலம் வரும் ஓடிபிகளில் என்ன உத்தரவு வந்துள்ளது?
சொல்லப்போனால், இந்த விதிகள் செப்டம்பர் 1ஆம் தேதியே அமலுக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால், டெலிகாம் நிறுவனங்களின் அவகாசம் கேட்டதால் அக்டோபர் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த விதிகள் முதலில் ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), வோடபோன் ஐடியா (Vodafone Idea), பிஎஸ்என்எல் (BSNL) போன்ற டெலிகாம் (Telecom) நிறுவனங்களுக்கே முதலில் பொருந்தும்.
அதாவது, பேங்க் நிறுவனங்கள், கடன் நிறுவனங்கள், ஆப் நிறுவனங்கள் உள்ளிட்டவை அதிகளவில் ஓடிபிகள் (OTP), யுஆர்எல் லிங்குகளை (URL Links) கஸ்டமர்களுக்கு அனுப்பு கின்றன. இதில் ஓடிபிகள் மூலம் பெரும்பாலான பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன. இதனால், அது தொடர்பான ஸ்பேம் எஸ்எம்எஸ், லிங்க் மற்றும் கால்களும் வருகின்றன. இதை தடுக்கும் வகையில் டிராய் நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்தவகையில், பேங்க், கடன் மற்றும் ஆப் உள்ளிட்ட எஸ்எம்எஸ்களை அதிகம் அனுப்பும் நிறுவனங்கள் தங்களது நம்பரை கட்டயாம் சேர்க்க வேண்டும். இல்லையென்றால், எஸ்எம்எஸ்கள், யுஆர்எல் லிங்குகளை கஸ்டமர்களுக்கு அனுப்ப முடியாது. இந்த ஏற்புப்பட்டியலில் சேர்ப்பதை டெலிகாம் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஆகவே, ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு, பேங்க் நிறுவனங்கள் எஸ்எம்எஸ் அனுப்பவ வேண்டுமால், டெலிகாம் நிறுவனங்களின் ஏற்புப்பட்டியலில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தங்களது நம்பரை சேர்க்க வேண்டும். இப்படி சேர்க்கப்படவில்லை என்றால், ஓடிபி வருவதில் தாமதம் ஏற்படலாம். ஆனால், ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கபட்டிருக்கிறது.
இதனால், பேங்க் நிறுவனங்கள் தங்களது நம்பர்களை பதிவு செய்திருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், இந்த விதிகளை அறிவித்ததில் இருந்து, நாடு முழுவதும் 3,000 பதிவு செய்யப்பட்ட அனுப்புநர்கள் மூலம் 70,000 யுஆர்எல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் உறுதி செய்திருக்கிறது.
ஆகவே, ஓடிபி தொடர்பான சிக்கல்கள் இனி இருக்காது. அதே நேரத்தில் யுஐஆர்எல் (URL), ஏபிகே (APK) மற்றும் ஓடிடி (OTT) மூலம் வரும் ஸ்பேம்களும் தடுக்கப்படும். அதேபோல கால்பேக் நம்பர்கள் அனுமதிப்பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்தால் அந்த நம்பர்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படும்.
இதனால், ஸ்பேம் கால்களும் கஸ்டமர்களுக்கு வரப்போதவது கிடையாது. இந்த விதிகளால் இவை மட்டுமே மாற இருக்கின்றன. கோடிக்கணக்கான கஸ்டமர்களை கொண்டிருக்கும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு இந்த விதிகளால் எந்தவித பாதிப்பும் கிடையாது. இதுகுறித்த பதற்றம் அடைய தேவையில்லை. உங்களுக்கு பேங்க் நிறுவனங்கள், கடன் நிறுவனங்கள் மற்றும் ஆப் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து வரும் எஸ்எம்எஸ்கள் டெலிகாம் நிறுவனங்களால் அனுமதி வழங்கப்பட்டு கிடைக்கும்.
ஆகவே, அதில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால், எளிதாக அந்த நிறுவனத்தை அடையாளம் கண்டு கொள்ளலாம். இதன் மூலம் ஒரே நேரத்தில் சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்கள் மற்றும் பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.