சேலம் மாவட்டம், ஓமலூரில் இயங்கி வரும் அரசு நிதி உதவி வேலாசாமி செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பேரூராட்சி தலைவர் செல்வராணி ரவிச்சந்திரன் மற்றும் தளபதி நற்பணி மன்ற தலைவர் கே.ஆர்.மகேந்திரன் ஆகியோர் தமிழக அரசு மாணவ மாணவிகளுக்கு கொண்டு வந்துள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், இதில் 145 விலையில்லா மிதிவண்டிகள் மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டன. பள்ளியின் தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்று பேசினார். மேலும், பள்ளியின் சார்பில் கலந்து கொண்ட முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.

விழாவில் திமுக மாவட்ட கவுன்சிலர் சண்முகம், நகரச் செயலாளர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் புஷ்பா, பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.