உலகம் முழுவதும் 80 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோய் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பதாகவும், இதில் 40 கோடி பேர் இது குறித்த முறையான சிகிச்சையை பெறுவதில்லை என்றும், உலக சுகாதார தகவல் தெரிவித்திருக்கிறது. சர்க்கரை நோயால் பாதம், கால், கண், இதயம், சிறுநீரகம்… ஆகிய முக்கிய உடல் உறுப்புகள் சேதமடைந்து பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் தங்களது ரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவில்லை என்றால் அதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது அவர்களது பாதங்கள் தான். பாதங்களை முறையாக பரிசோதித்து சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அந்தவகையில், சர்க்கரை நோயினால் ஏற்படும் புண்ணை போக்கும் சில மருத்துவ குறிப்புக்களை இங்கே பார்ப்போம்.

மா இலை மற்றும் அத்தி இலை ஆகிய இரண்டையும் எடுத்து அரைத்து கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு மண் பாத்திரம் வைத்து அதில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் இந்த அரைத்த இலைகளை போட்டு அது பாதியாக வரும் வரை காய்ச்ச வேண்டும். பின்பு இதை ஒரு வெள்ளை துணியில் ஊற்றி வடிகட்டி அந்த சாறை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். இந்த சாற்றை தினமும் காலை உணவுக்கு முன்பு 50 மில்லி குடிக்க வேண்டும். அதேப்போல் இரவு உணவுக்கு பிறகு 50 மில்லி குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வர உடலில் ஏற்பட்ட புண் விரைவில் சரியாகும்.

அத்தி இலை, வேப்பிலை, மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் எண்ணெய்யில் போட்டு கலந்து புண் ஏற்பட்ட இடத்தில் இரவில் தூங்கும் முன்பு தடவி வந்தால் தீராத புண்களும் சரியாகிவிடும். பகலில் உணவிற்கு முன்பு பப்பாளி பழம் சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்திற்கும், புண் சரியாவதற்கும் மிகவும் நல்லது. ஆவாரம் இலை மற்றும் பூவை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறு அனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதனை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும். இதுபோல் ஒருநாள்விட்டு ஒருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

தான்றிக்காய் தோல் 50 கிராம்- புளியங் கொட்டைத் தோல், சீயக்காய், மஞ்சள் ஆகியவை வகைக்கு 20 கிராம்- இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து இளநீர் விட்டு அரைத்து வைக்கவும். பின்னர் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை அடுப்பிலேற்றி சிறுதீயாய் எரிக்கவும். எண்ணெய் நன்கு சூடானதும் அரைத்த விழுதை கொஞ்சங் கொஞ்சமாய் சேர்க்கவும். எண்ணெய் பொரிந்து அடங்கிய பின் அடுப்பிலிருந்து இறக்கி, ஆற வைத்து வடிகட்டிப் பத்திரப்படுத்தவும். இந்த மருந்து ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நன்மருந்து. வாய்ப்புண், மூக்குப்புண், லேசாய் தடவிட உடனே குணமாகும். சேற்றுப் புண், வெட்டுக்காயங்கள் விரைவில் ஆறிவிடும்.

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். இதனை Idp7News உறுதி செய்யவில்லை.

Readmore: சினிமாவை மிஞ்சிய பயங்கரம்!. பட்டப்பகலில் ஏடிஎம்மில் துப்பாக்கிச்சூடு நடத்தி பணம் கொள்ளை!. வங்கி ஊழியர் பலியான சோகம்!