வங்கக்கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. அது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (25-11-2024) காலை 08.30 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது.மேலும் இந்த புயல் சென்னை அருகே கரையைக்கடக்ககூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Readmore: கண்களில் நீர்வடிதல், சிவந்து காணப்படுகிறதா?. வேகமெடுத்த ‘ப்ளூ வைரஸ்’ காய்ச்சல்!. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை