ஹோட்டலில் இருந்து மொபைல் பார்த்தப்படி வெளியே வந்த தந்தையின் அலட்சியத்தால், கார் மோதியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தின் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது,

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், மும்பை-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் பதார்டி ஃபாட்டா பகுதிக்கு அருகில் பிரபலமான ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. அதன் வளாகத்தில் நேற்று காலையில் தனது தந்தையுடன் சென்ற துருவ் ராஜ்புத் என்ற 5 வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது தந்தை கார் பார்க்கிங்க்கு வந்துள்ளார். இதனை கண்ட சிறுவனமும், தந்தையின் பின்னால் விளையாடிப்படியே சென்றுள்ளார். இருப்பினு, தந்தை மகனை கவனிக்காமல், செல்போனை பார்த்தப்படி அலட்சியமாக சென்றார். அப்போது ஓடிவந்த சிறுவன் மீது கார் பார்க்கிங்க்கு சென்ற கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். இருப்பினும் சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. உண்மையை அறியாமல், கார் ஓட்டுநரை அங்கிருந்த சிலர் ஆத்திரத்தில் அடித்தனர். இதையடுத்து, கார் ஓட்டுநர் மீது BNS மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் 106, 125A, 125B பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Readmore: விவசாயிகளுக்கு ஆதார் கார்டு போலவே தனி அடையாள அட்டை..!! சேலத்தில் தொடங்கியது கணக்கெடுப்பு பணி..!!