மாமனாரும் மருமகளும் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் மாமியாரை கொலை செய்து கழிவறையில் மறைத்து வைத்து நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியை சேர்ந்தவர் கீதா தேவி(50). இவரது கணவர் குர்கு யாதவ்க்கும் மருமகளுக்குமிடையே கடந்த 2 வருடங்களாக தகாத உறவில் இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கீதா தேவி வெளியே சென்றிருந்த நிலையில், மாமனாரும் மருமகளும் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது திடீரென வீட்டிற்கு சென்ற கீதா தேவி இருவரையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து இருவரையும் கையும் களவுமாக பிடித்த கீதா தேவி, இத்துடன் உறவை கைவிட வேண்டும் என்றும் இல்லையென்றால், மகன் தீபக்கிடம் தகாத உறவை பற்றி கூறிவிடுவேன் என்று கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாமனாரும், மருமகளும் சேர்ந்த கீதா தேவி கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, நேற்றுமாலை கீதா தேவியை வீட்டிற்கு வரவழைத்து, மாமனாரும் மருமகளும் சேர்ந்து கீதா தேவியை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். இதையடுத்து, கொலையை மறைக்க மாமியாரின் சடலத்தை வீட்டின் கழிவறைக்குள் மறைத்து வைத்து காணவில்லை என்று நாடகமாடியுள்ளனர்.
இதையடுத்து, வீட்டிற்கு வந்த கணவர் தீபக்கிடம் தனது மாமியார் அடையாளம் தெரியாத நபருடன் பைக்கில் எங்கோ சென்றதாக பொய் கூறியுள்ளார். தொடர்ந்து கணவர் குர்கு யாதவ் வெள்ளிக்கிழமை கீதா தேவியை காணவில்லை என்று புகார் அளித்தார். விசாரணையைத் தொடங்கிய போலீஸார், சனிக்கிழமை காலை கழிவறை தொட்டியில் கீதாதேவியின் சடலத்தை மீட்டனர். தலையில் பலத்த காயம் காரணமாக அவர் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது.
மாமனார், மருமகள், மகன் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்ததில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. தீவிர விசாரணையில், மாமனார் மற்றும் மருமகள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.