விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தின் வாயிலாக நிதி வழங்கி வருகிறது. ஆண்டுக்கு மூன்று தவணைகளாக மொத்தம் ரூ. 6 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இப்பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிஎம் கிசான் வாயிலாக 18 வது தவணை பணம் விவசாயிகளுக்கு எப்போது கிடைக்க போகிறது என்பது குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது பிரதமராக பொறுப்பேற்ற மோடி, ‘பிஎம் கிசான் நிதி’ எனப்படும் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். இதனையடுத்து அண்மையில் 17 வது தவணையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. சிறு, குறு விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் விதமாக பிஎம் கிசான் யோஜனா திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த பணம் ஒரே தடவையாக இல்லாமல், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என 3 தவணைகளாக ரூ.2000 வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் சிறு, குறு என நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் இத்திட்டத்தின் வாயிலாக பயனடைந்து வருகின்றனர். இதுவரை 17 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 18 வது தவணைத் தொகை எப்போது கிடைக்க போகிறது என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த மாதத்திற்கான நிதி இந்த வாரம் வழங்கப்பட உள்ளது. யாருக்கெல்லாம் இந்த பணம் வழங்கப்படும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. இதை எளிதாக சில கிளிக் மூலம் சோதனை செய்ய முடியும்.
2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட PM-KISAN திட்டம், நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்குகிறது. நேரடி பயன் பரிமாற்றம் (டிபிடி) முறையில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி மாற்றப்படுகிறது.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 9.26 கோடி பயனாளிகளுக்கு ரூ.20,000 கோடிக்கும் அதிகமான பணம் வழங்கப்பட உள்ளது.. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் செய்யப்பட்ட நிதி மூலம், PM-KISAN திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்தப் பலன்கள் ரூ. 3.04 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. 2019 இல் தொடங்கப்பட்டதில் இருந்து 11 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள விவசாயி குடும்பங்களை பணம் சென்றடைந்துள்ளது. இந்தநிலையில், யாருக்கெல்லாம் இந்த பணம் வழங்கப்படும் என்பதை எளிதாக சில கிளிக் மூலம் சோதனை செய்ய முடியும்.
எப்படி சோதனை செய்வது? இந்த திட்டத்தில் பணம் பெற நீங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். இதற்கான திட்ட விண்ணப்பத்தை நிரப்பி, அதில் இணைய வேண்டும். அதேபோல் உங்களிடம் வங்கி கணக்கு இருக்க வேண்டும். மேலும் வங்கி கணக்கை கேஎப்சி உடன் சரிபார்த்து இருக்க வேண்டும். அதோடு இல்லாமல் உங்கள் போன் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். சரி இந்த திட்டம் மூலம் உங்களுக்கு இந்த பணம் கிடைத்திருக்கிறதா என்று பார்க்க பின்வரும் வகையில் சோதனை செய்ய வேண்டும்.
அதிகாரப்பூர்வ PM Kisan இணையதள பக்கத்தில் லாக் இன் செய்யவும். லாக் இன் செய்தவுடன் Beneficiary Status Page என்ற பக்கம் காட்டும். அந்த பக்கத்திற்கு செல்லவும். அங்கே உள்ள “Beneficiary Status” என்பதைக் கிளிக் செய்தால் அடுத்த பேஜ் திறக்கும். நீங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் இருந்தால் உங்கள் லாக் இன் கணக்கை எடுத்து வைத்துக்கொள்ளவும். அதை பயன்படுத்தி உங்கள் ஆதார் எண் அல்லது அக்கவுண்ட் எண் மூலம் உள்ளே செல்ல முடியும். அந்த பக்கத்தில் “Get Data” என்பதைக் தேர்வு செய்து உங்கள் விவரங்களை பார்க்கலாம். நீங்கள் திட்டத்தில் இருக்கிறீர்களா என்பதை சோதனை செய்ய முடியும். இதிலேயே உங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதையும் பார்த்து சோதனை செய்து கொள்ள முடியும்.
Readmore:மாணவர்களே குட்நியூஸ்!. மிலாது நபி!. செப்டம்பர் 17ம் தேதி பொது விடுமுறை!.