தமிழ்நாடு அரசின் வேளாண்மை-உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு 50% மானியத்தில் மின்மோட்டர் பம்புசெட்கள் (Pump Set) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல், குறைந்த செலவில் அதிகமான பாசன நீர் இரைத்தல் இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இத்திட்டத்தில் விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மின் மோட்டார்கள் தேர்வு செய்யலாம். சிறு, குறு, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
3 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகள். பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை புதிதாக மாற்ற விரும்பும் விவசாயிகள். புதிதாக அமைக்கும் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுக்கான புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு மானியம் வழங்குதல்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டையின் நகல், புகைப்படம், வங்கிக்கணக்கு புத்தகத்தின் நகல், மின் இணைப்பு நகல், சாதிச் சான்றிதழ் நகல், சிட்டா மற்றும் அடங்கல், சிறு, குறு விவசாயிகள் சான்று. விவசாயிகள் நேரடியாக https://mis.aed.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் – வேளாண்மை பொறியியல் துறை அவர்களையும் அணுகலாம்.
Readmore: ஆசிரியர்களை எச்சரித்த அன்பில் மகேஷ்!. சொற்பொழிவு சர்ச்சையானதால் அதிரடி!