சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 26) வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா. பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, ”சேலம் மாவட்ட ஜூலை 2024 மாதத்திய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஜூலை 26) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண்: 215-இல் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
Read More : ஜெயலலிதா, விஜயகாந்த் பாணியை கையிலெடுத்த விஜய்..!! சேலத்தில் முதல் மாநாடு..!! வரலாறு படைத்த திடல்..!!