கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த மருத்துவரை மர்ம நபர் ஒருவர் வீடியோ காலில் தொடர்பு கொண்டு தான் சிபிஐ அதிகாரி என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண் மருத்துவரிடம் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பார்சல் வருவதாகவும் அதில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், நீங்கள் சிபிஐ கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாகவும் அந்த மர்ம நபர் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த மர்ம நபர் மருத்துவரிடம் பெண் மருத்துவருடைய வங்கி கணக்கு விபரங்களை அனுப்புமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

மேலும், மருத்துவரும் சிபிஐ அதிகாரி கேட்கிறாரே என நம்பி வங்கி கணக்கு விவரங்களை அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து, மருத்துவரின் வங்கி கணக்கில் இருந்த 38 லட்சம் ரூபாயை தான் அனுப்பும் வங்கி கணக்கு அனுப்புமாறு சிறிது நேரத்தில் உங்கள் கணக்கில் வந்துவிடும் எனவும் மருத்துவரிடம் மர்ம நபர் கூறியுள்ளார். இதனை நம்பி மருத்துவரும் 38 லட்சம் ரூபாயை மர்ம நபர் கூறிய வங்கி கணக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிர்ச்சியடைந்த பெண் மருத்துவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் தனி படி அமைத்து விசாரணையில் களமிறங்கிய போது சிபிஐ அதிகாரி போல நடித்தவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோணப்பள்ளி பிரசாத்ராவ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் ஆந்திராவிற்கு சென்று போலி சிபிஐ அதிகாரியை கண்டுபிடித்து சமன் வழங்கி கைது செய்துள்ளனர். தற்போது போலீசார் கோணப்பள்ளி பிரசாத்ராவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : அவ்வளவு பணம் எல்லாம் தர உத்தரவிட முடியாது..!! உங்களுக்கு வேண்டுமென்றால் சம்பாதித்துக் கொள்ளுங்கள்..!! டென்ஷனான நீதிபதி..!!