காலாண்டு தேர்வு முடிந்தநிலையில் தொடர் விடுமுறையையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை மற்றும் காலாண்டுத் தேர்வுகள் தற்போது முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் ஏரியில் படகு சவாரி செய்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி மற்றும் மான் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர். லேடீஸ் மற்றும் ஜென்ட்ஸ் சீட் பகுதிகளிலும் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

Readmore: சேலத்தில் மாணவன் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆன ரூ.2.50 லட்சம்!. தந்தையின் செயலுக்கு பாராட்டு!