கடந்த 5 முதல் 10 ஆண்களாக கணைய புற்றுநோய் பாதிப்பு என்பது கணிசமாக உயர்வை சந்தித்திருக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக கொழுப்புள்ள உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்கள் ஆகியவை இதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் குறிப்பாக ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதாவது பெண்களை விட கணைய புற்றுநோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு ஆண்களுக்கு இருமடங்கு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்ட முக்கிய காரணமாக புகைப்பிடித்தலும் மது அருந்துவதுமே இருக்கிறது.

இந்தநிலையில், ‘ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றால் கணையப் புற்றுநோய் உயிரிழப்பை தவிர்க்கலாம்’ என மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவமனை மருத்துவ இயக்குநர் ரமேஷ் அர்த்தனாரி, குடல் இரைப்பை அறுவை சிகிச்சைத்துறை டாக்டர்கள் மோகன், அழகம்மை, புற்றுநோய் துறைத்தலைவர் கிருஷ்ணகுமார் ரத்னம் கூறியதாவது, மலக்குடல் புற்றுநோயில் உயிர்பிழைப்பு 40 – -50 சதவீதம். அதேநேரம் கணைய புற்றுநோயில் உயிர்பிழைப்பு 12 சதவீதமே என்று குறிப்பிட்டார்.

உலகளவில் தினமும் 1200 பேர் இந்நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் கணையப் புற்றுநோய் பாதித்தோரில் 10 – 20 சதவீதத்தினரே உரிய நேரத்தில் சிகிச்சை பெற வருகின்றனர். இந்த புற்றுநோயில் இருவகை உண்டு. முதல் வகை கணையத்தில் உருவாவது. இரண்டாவது வகை சிறுகுடலில் சிறிய திறப்பான ‘வேட்டரின் ஆம்புலா’வில் உருவாகிறது.

புகைபிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன், மரபணு, கட்டுப்பாடற்ற நீரிழிவு ஆகியவை ஆபத்துக் காரணிகள். பதப்படுத்திய உணவுகள், அதிக கொழுப்புள்ள உணவுகள், சர்க்கரை அதிகம் சேர்த்த பானங்கள் கணைய புற்றுநோயை உருவாக்குகின்றன. இது முதிர்ச்சியடையும் வரை அறிகுறிகள் வெளிப்படாது. உடல் எடை திடீரென குறைதல், அடிவயிற்று வலி, மஞ்சள் காமாலை, புதிதாக நீரிழிவு அறிகுறிகள் நோய் முற்றிய நிலையிலேயே வெளிப்படுகின்றன. உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தால் பயனளிக்கும் என்றார்.

Readmore: திருப்பூரில் தாய், தந்தை, மகனை கொலை செய்து நகைகளும் திருடியது எப்படி..? முதற்கட்ட விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!