Annamalai | தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்றிரவு (ஜூலை 31) திடீரென விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் டெல்லி சென்ற அவர், நாடாளுமன்ற தேர்தல் பணி தொடர்பாக தலைமையிடம் விளக்கம் அளித்திருந்தர். இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் டெல்லி சென்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ”இது ஒரு வழக்கமான சுற்றுப்பயணம் தான், மாநிலத்தில் உள்ள பாரதிய ஜனதாவின் செயல்பாடுகள் குறித்து கட்சி தலைமைக்கு தெரிவிப்பதற்காக மாநில தலைவர்கள் டெல்லி செல்வது வழக்கம் என்று தெரிவித்தனர். மேலும், அண்ணாமலை இங்கிலாந்து சென்று சர்வதேச அரசியல் படிப்பு படிக்க செல்வதற்கான அனுமதி குறித்தும் பேசுவதற்கான வாய்ப்பு இருப்பதாக” தெரிவித்தனர். இந்த பரபரப்புக்கு மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ச்ரவியும் இன்று டெல்லி செல்ல இருக்கிறார்.
முன்னதாக திடீரென டெல்லி செல்வது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “செத்தாலும் இனி விமான நிலையத்தில் பேசமாட்டேன், முயற்சி செய்ய வேண்டாம்” என்று கூறிவிட்டு சென்றார்.
Read More : வயநாடு நிலச்சரிவு…!! அதிமுக ரூ.1 கோடி நிதியுதவி…!! பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!