புத்தம் புதிய முழு பிரபஞ்சமே உருவானாலும் இன்னொரு தலைவர் உருவாக முடியாது. அவர் ஒருவர்தான். அவர் மட்டும்தான்” என்று சூப்பர் ஸ்டாரை, நடிகை ரித்திகா சிங் பெருமையாக பேசியுள்ளார்.
வேட்டையன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தில் இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங், ஏ.எஸ்.பி ரூபா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து இன்ஸ்டா பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், “ரஜினி சாருடன் இருக்கும்போது, ஒருவர் அறியும் மிகப் பெரிய உண்மை என்ன என்றால், நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருந்தால், தனித்துவமாக ஜொலிப்பீர்கள். வாழ்க்கை உங்கள் மீது எதை எறிந்தாலும், அப்போதும் அன்பாக இருக்க வேண்டும் என்ற முடிவையே தேர்ந்தெடுப்பீர்கள்.
ரஜினி சார், கண்களின் மூலமாகவும் புன்னகையாலும் பகிரும் அன்பானது மிகுந்த சக்தி வாய்ந்தது. அது உங்களுக்குள் இருக்கும் காயங்களை ஆற்றும். ஒரு பார்வையிலேயே அவர் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு அளிக்கும் உணர்வை, நான் இதற்கு முன் அனுபவித்தது கிடையாது.
கேமராக்கள் ரொலிங்கில் இல்லாதபோது அவர் மிகவும் வார்மாக, சில்லாக (warm & chill) இருக்கிறார். ஆனால் ஆக்ஷன் சொன்னவுடன் முற்றிலும் புதியவராக மாறிவிடுகிறார். நம்ப முடியாத மனிதராக உருவெடுக்கிறார். அந்த நம்ப முடியாத மனிதரைத்தான் நாம் நேசிக்கிறோம். இன்னொரு ரஜினிசார் எப்போதும் வரப்போவதில்லை. அவரைப் போல இன்னொரு லெஜண்டரி மனிதன் பிறக்கப்போவதில்லை. இன்னொரு புத்தம் புதிய முழு பிரபஞ்சமே உருவானாலும் இன்னொரு தலைவர் உருவாக முடியாது. அவர் ஒருவர்தான். அவர் மட்டும்தான்” என்று பெருமையாக பேசியுள்ளார்.