ஈரோடு அந்தியூர் அருகே தனியார் பள்ளி மாணவி வகுப்பறையில் மயக்கமடைந்து திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி தேவபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ஹரிணி. அந்தியூரில் உள்ள தனியார் பள்ளியில் ஹரிணி(13) என்ற மாணவி எட்டாம் வகுப்பு படித்து வந்தார். மாதாந்திர தேர்வு எழுதிய நிலையில், அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை, அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் ஆசிரியர்கள் அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு குவிந்தனர். இதனையடுத்து பள்ளி நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Readmore: இனி ரொம்ப சிரமம்!. நவ.1 முதல் டிஜிட்டல் பேமெண்ட்டுகளில் அதிரடி மாற்றம்!. புது ரூல்களை இறக்கிய RBI!.