தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று பூலாம்பட்டியில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று எடப்பாடி அருகே பூலாம்பட்டியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ராணி, பொருளாளர் சண்முகம் சிறப்பு அழைப்பாளரான தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன், சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பானது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. திமுக ஆட்சிய் அமைந்தவுடன் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Readmore: எடப்பாடி அருகே பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய பெற்றோர்கள்!. மேலதாளங்கள் முழங்க மாணவர்கள் உற்சாகம்!