தற்போதைய காலக்கட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். பெண்கள் இல்லாத துறையே இல்லை எனும் அளவிற்கு, அவர்களுக்கான பிரதிநிதித்துவம் எல்லாம் துறைகளிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகளும் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் பெண்களுக்காக பிரத்யேகமான திட்டமாக மகிளா சம்மான் சேமிப்பை செயல்படுத்தி வருகிறது. சிறிய அளவில் முதலீடு செய்து இத்திட்டத்தில் அதிக லாபம் பார்க்கலாம். இந்த திட்டம் பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம். கிராமம், நகரம் என அனைத்து இடங்களில் வசிக்கும் பெண்களுக்காக சிறப்பான பல முதலீடு திட்டங்கள் தபால் அலுவலத்தில் உள்ளது.

அந்த வகையில் போஸ்ட் ஆபிஸ் வழங்கும் சிறப்பான திட்டம் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ். இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு நல்ல வட்டி கிடைக்கிறது. மேலும் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் உத்தரவாதமான வருமானமும் கிடைக்கிறது. இதனால் இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் பெண்கள் அதிகபட்சமாக 2 ஆண்டுகளுக்கு ரூ. 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டுக்கு இரண்டு ஆண்டுகளில் 7.5 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கும். தபால் அலுவலகத் திட்டத்திங்களுக்கு பிரிவு 80C இன் கீழ் வரிவிலக்கும் உண்டு. இதனால் மகிசா சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்யும் அனைத்து பெண்களுக்கும் அரசு வரிச் சலுகை வழங்குகிறது.

மகிளா சம்மான் திட்டத்தின் மூலம் அதிக வருமானம் கிடைக்கும். இதில் 7.5% ஆண்டு வட்டி விகிதத்துடன் இரண்டு ஆண்டுகளில் ரூ.1,74,033 வரை சம்பாதிக்கலாம்.. உதாரணமாக: ரூ.10,000 முதலீடு செய்வது இரண்டு ஆண்டுகளில் ரூ.11,602 ஆக உயரும். வருமானம் உங்கள் வங்கிக் கணக்கில் காலாண்டுக்கு ஒருமுறை வரவு வைக்கப்படும். அதே போல், இத்திட்டத்தின் கீழ் பெண்கள் பல கணக்குகளைத் திறக்கலாம், கணக்கு திறப்புகளுக்கு இடையே கட்டாயம் 3 மாத இடைவெளி இருக்கும். முதலீட்டு வரம்பு: குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000, அதிகபட்ச வரம்பு ரூ.2 லட்சம் ஆகும்.

மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது? உங்கள் அருகிலுள்ள வங்கி அல்லது தபால் நிலையத்திற்குச் செல்லவும். மகிளா சம்மான் சேமிப்பு திட்ட கணக்கிற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். சிறுமிகள் சார்பாக, பாதுகாவலர்கள் சார்பாக விண்ணப்பிக்கலாம்.

Readmore: அடுத்தடுத்து விவாகரத்து செய்யும் திரைபிரபலங்கள்!. இசைப்புயல் AR.ரஹ்மான் – சாய்ரா டிவர்ஸ்!. ரசிகர்கள் ஷாக்!