9 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இ – மெயில் ஐடிகளை கிரியேட் செய்துதர அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இ -மெயில் முகவரியை உருவாக்க, வகுப்பு ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த இ – மெயில் முகவரியை, பள்ளிக்கல்வியின் எமிஸ் மாணவர் விபரங்களுடன் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31க்குள் துவக்க வேண்டும், பயன்படுத்துவது, குறித்து ஆசிரியர்கள் அவர்களுக்கு கற்பிக்க மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். +2 முடிக்கும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது தொடர்பான தகவல்களை பெற ஏதுவாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Readmore: அண்ணாமலைக்கு ஒன்றிய அளவில் பொறுப்பு..? மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்கும் அதிமுக..? எடப்பாடி பழனிசாமி சொன்ன சூசக பதில்..!!