சேலம் ஏற்காட்டில் பகல் நேரத்திலேயே நிலவும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றனர்.

ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து சீதோசன நிலை மிகவும் குளுமையாக மாறி உள்ளது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் ஏற்காட்டிற்கு வருவார்கள். இதனால் ஏற்காட்டில் குளிர் அதிகமாக காணப்படுகிறது.

இந்தநிலையில் ஏற்காட்டில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதையடுத்து பகல் நேரத்திலேயே அதாவது காலை 11 மணி அளவில் மீண்டும் கடும் பனிமூட்டம் நிலவியது. மேலும் மலை பாதையை வெண்பனி மூடியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.

Readmore: இனி இவர்களுக்கும் விவசாய நிலம்..!! ரூ.5 லட்சம் மானியம்..!! ஆனால் விண்ணப்பிக்க இதெல்லாம் கட்டாயம்..!!