ரேஷன் அட்டைகளுக்கு டிஜிட்டல் KYC செய்வதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, ரேஷன் அட்டைகளுக்கு டிஜிட்டல் KYC செய்வதற்கு செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், டிஜிட்டல் KYC செய்வதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், ரேஷன் அட்டையுடன் தொடர்புடைய அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும், கைரேகைகள் மற்றும் பிற தகவல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் அரசு வழங்கும் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை மற்றும் சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு, ரேஷன் கடைக்கு செல்லும் போது, கைரேகை பதிவு செய்தே பொருட்கள் வாங்கலாம். இதனால், மோசடி சம்பவங்களை தடுக்கும் விதமாக டிஜிட்டல் KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது, மேலும் இது பொருளாதார ரீதியாக சிக்கல்களில் உள்ள மக்களுக்கு உதவுகிறது. மேலும் குறிப்பிட்ட நாளுக்குள் இந்த அப்டேட்டை முடிக்காவிடில் அவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்தாக வாய்ப்பு உள்ளது என்பதால் உரிய கால அவகாசத்திற்குள் அந்த பணியை முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Readmore:பஞ்சாயத்து செயலர் நீக்க விவகாரம்!. சேலம் ஆட்சியருக்கு பிடிவாரண்ட்!. ஐகோர்ட் உத்தரவு!