சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் அதிமுகவின் 53-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் என்னை சந்தித்ததாக கூறுவது பச்சைப்பொய். அதிமுகவில் எந்த பிரிவும் கிடையாது. அவர்கள் எல்லோரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள். ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒருங்கிணைப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். நீக்கப்பட்டவர்களை சேர்க்குமாறு மூத்த தலைவர்கள் யாரும் வலியுறுத்தவில்லை. அதிமுக இரண்டாகி விட்டது அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை கூட இனி உபயோகிக்க வேண்டாம். பிரிந்து சென்றவர்கள் இன்று எத்தனையோ அவதாரங்களை எடுக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

Readmore: எடப்பாடி அருகே ஆடுகளை கடித்து குதறிய மர்மவிலங்கு!. மக்கள் அச்சம்!