நடிகர் விஜய் தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கோட்’- தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதுவரை கோட் படத்தின் 3 சிங்கிள்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதில் தனது கட்சி பெயரை பயன்படுத்தக் கூடாது என விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் திரைக்கு வரவுள்ளதை முன்னிட்டு பேனர்கள், போஸ்டர்கள் ஏதேனும் வைத்தால் அதில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்கிற கட்சியின் பெயரை பதிவு செய்யக்கூடாது.

அதற்கு ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்கிற பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தவெக கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எக்காரணம் கொண்டு திரைப்படங்களுக்கு அரசியல் கட்சியின் பெயரை பயன்படுத்தக்கூடாது என அதிரடியாக உத்தரவு போட்டுள்ளார் விஜய்.

Read More : சோஷியல் மீடியாவில் பிரபலம் ஆகணும்..!! மக்கள் என்னை கண்டு பயப்படணும்..!! கைதான இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்..!!