நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது, கொசுக்களை பற்றி பேச இதுவா நேரம்..? என ஓபிஎஸை கிண்டலடித்துப் பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சமீப காலமாகவே, அதிமுகவின் இரு பிரிவினரிடையே வார்த்தைப் போர் முற்றி வருகிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. சென்னையில் இன்று (பிப்.18) செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ஓபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள் என்று சிரித்தபடி பதிலளித்தார். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது, கொசுக்களை பற்றி பேச இதுவா நேரம்..? என ஓபிஎஸை கிண்டலடித்தார். அதேபோல், அதிமுகவின் வெற்றிக்கு ரகசியம் வைத்திருப்பதாக ஓபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு, அவர் ரகசியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் இருந்தே, அவர் யாருடன் ரகசிய தொடர்பு வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது.

நீட் ரகசியம் உதயநிதி உடையது. அதனால், திமுகவுடன் ஓபிஎஸ் ரகசிய உறவு வைத்திருந்ததால், அவருக்கும் அந்த நோய் தெற்றி விட்டது. மேலும், அது என்ன தங்கமலை ரகசியமா? அல்ல சிதம்பர ரகசியமா..? அது என்ன ரகசியம் என்பதை சொல்லிவிட்டு போக வேண்டியதுதானே. ரகசியம் என்று கூறி 4 ஆண்டுகளாக ஏமாற்றி வரும் ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு, இனி தொண்டர்களிடையே எடுபடாது” என்று தெரிவித்துள்ளார்.

Read More : அரசு பள்ளியில் +2 மாணவன், தற்கொலை முயற்சி..! தேர்வில் தேர்ச்சி பெற மாட்டேன்’… தோல்வி பயமா..?