பெரும்பாலானோர் தலைமுடியை அழகாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள். முடியை அழகாகவும், கவர்ச்சியாகவும் மாற்ற ஹேர் டைகள் மற்றும் ஸ்ட்ரெய்ட்னர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. ஹேர் டை மற்றும் கெமிக்கல் ஸ்ட்ரெய்ட்னர்களை அதிகமாகப் பயன்படுத்தினால் மார்பகப் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

ஆராய்ச்சியின் படி, தொடர்ந்து ஹேர் டையை பயன்படுத்தும் பெண்களில், மார்பக புற்றுநோயின் ஆபத்து 9% முதல் 60% வரை அதிகரிக்கிறது. குறிப்பாக, டார்க் கலர் ஹேர் டையின் பக்க விளைவு மிகவும் ஆபத்தானது. அதாவது, ஹேர் டை பயன்படுத்தாத பெண்களுடன் ஒப்பிடுகையில், ஹேர் டைஸ் பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து 9% அதிகரிக்கிறது. குறைந்தது 5 முதல் 8 வாரங்களுக்கு ஒருமுறை கெமிக்கல் ஹேர் ஸ்ட்ரெய்ட்னர்களைப் பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயின் ஆபத்து 30% அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

அழகு சாதனப் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் எண்டோகிரைன்-டிஸ்ரப்டிங் காம்பௌண்ட்ஸ் மற்றும் கார்சினோஜென்ஸ் போன்ற 2 ரசாயனங்கள் உள்ளன. இவற்றை அதிகம் பயன்படுத்தும்போது, ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

மார்பக புற்றுநோய்க்கான பிற காரணங்கள் :

* வயதாகும்போது பெண்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கிறது.

* மோசமான உணவு, உடற்பயிற்சியின்மை, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்.

* ஹேர் டை மற்றும் ஸ்ட்ரைட்னர்களின் பயன்பாட்டால் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கிறது.

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் :

* மார்பகம் அல்லது அக்குள் பகுதியில் கட்டி அல்லது தடிமனாதல்.

* மார்பக அளவு, வடிவம் அல்லது தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படுதல்.

* தொடர்ந்து மார்பக வலி அல்லது சிவந்து போதல்.

* நிப்பில் பகுதியில் இருந்து ஃப்லூயிட் வெளியேற்றம் (தாய்ப்பால் தவிர) அல்லது நிப்பில் தோற்றத்தில் மாற்றங்கள்.

மார்பக புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்கான குறிப்புகள் :

* ஹேர் டை மற்றும் ஸ்ட்ரைட்னர்களின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கையான மற்றும் ஆர்கானிக் பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

* தினசரி உடற்பயிற்சி ஆரோக்கியமான எடை மற்றும் ஹார்மோன் அளவை பராமரிக்க உதவுகின்றன.

* உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

* புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

* வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள் அவசியம்.

Read More : இனி வீடு, நிலத்திற்கான சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்ணை எளிமையாக தெரிந்து கொள்ளலாம்..!! புதிய இணையதளம் உருவாக்கம்..!!