கல்வடங்கம் அருகே தண்ணீர்தாசனூர் பகுதியில் மர்மவிலங்கு ஆடுகளை கடித்து குதறியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் தண்ணீர்தாசனூர் பகுதியை சேர்ந்தவர் அய்யண்ணன், விவசாயம் செய்துவரும் இவர், ஆடுகளை வளர்த்து வருகிறார். அதன்படி, வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வெளியே ஆடுகளை கட்டிவைத்து தூங்க சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலை வீட்டிற்கு வெளியே பார்த்தபோது 2 ஆடுகள் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் பிரதீப் குமார், அரசிராமணி குள்ளம்பட்டி கால்நடை மருந்தக உதவியாளர் ஆகியோர் இறந்து கிடந்த ஆடுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஊருக்குள் மர்ம விலங்கு நடமாடுகிறதா என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Readmore: உங்க வீட்டுல “ஆம்பள எவனுமே இல்லையா?” பெண்களிடம் அநாகரிகமாகப் பேசிய பா.ம.க. எம்.எல்.ஏ அருள்!. வைரல் வீடியோ!