வரைவு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்காக நவம்பர் 16, 17, 23, 24ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தங்களுடைய பெயர் உள்ளதா? என்பதை வாக்காளர்கள் www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம். அதில், திருத்தம் ஏதாவது மேற்கொள்ளப்பட வேண்டுமென்றால், தமிழ்நாடு முழுவதும் இம்மாதம் 4 நாட்கள் நடக்கும் சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் வரும் 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி 18 வயது நிறைவடைந்தோர் சேர்த்தல் படிவத்தை வழங்கி பெயரை பதிவு செய்து கொள்ளவும், இடம் மாறுதல் செய்தோர் முகவரி மாற்றம் செய்து கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/நீக்கல் பணிகளை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நவ.28ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 26ஆம் தேதிக்குள் அனைத்து விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுத்து, 2025ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More :
உஷார்!. இப்படி சமைக்கப்பட்ட உணவுகளும் நீரிழிவு நோய் வர காரணம்!. ஆய்வில் அதிர்ச்சி!