தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியை விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து கட்சியின் பாடலும் வெளியிடப்பட்டது. பாடலாசிரியர் விவேக் வரியில், தமன் இசையில் இப்பாடல் உருவாகியுள்ளது. பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் எளிமையான முறையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சிக்கொடி அறிமுக விழாவுக்கு 5,000 பேர் பங்கேற்பார்கள் எனக்கூறி போலீசிடம் அனுமதி கேட்ட நிலையில், 300 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

கட்சிக் கொடிக்கான அர்த்தம் :

கொடி அர்த்தம் குறித்து, சங்க காலத்தில் மன்னர்கள் பயன்படுத்தி வந்தமையால், அதோடு தொடர்பு படுத்தி வைத்து பார்க்கும்போது, ‘சங்ககாலத்தில் இருந்து வாகை மலர் இருந்து வருகிறது. போர் புரிபவர்கள் வெற்றியின் அடையாளமாக வாகை மலரை சூடி வருவார்கள். போர் புரிய சென்ற தலைவன் திரும்பி வரும்போது கழுத்தில் அணிந்து வரும் மலர் மாலையை கொண்டே போரின் நிலையை அறிவார்கள்.

போர் முடிந்து வாகை மலர் அணிந்து வந்தால் அவர் வெற்றி பெற்றவர் என கருதப்படுவர். ஆனால், அதற்கான அர்த்தத்தை மாநாட்டில் கூறுகிறேன் என தவெக தலைவர் விஜய் கூறியிருக்கிறார். மேலும், மாநாட்டில் கட்சியின் கொள்கை மற்றும் அடுத்தகட்ட நகர்வு குறித்து தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : இனி திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம்..!! மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!