Post Office Saving Schemes | போஸ்ட் ஆபீஸ் செயல்படுத்தி வரும் சேமிப்பு திட்டங்களால் ஏழை மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். போஸ்ட் ஆபீஸில் கடன் உதவி, அதிக வட்டி, வருமான வரி விலக்கு திட்டங்கள் என்று ஏராளமான வசதிகள் உள்ளதால் பெரும்பாலானோர் அதில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். பெண் குழந்தைகளின் நலனிற்காக “செல்வமகள் சேமிப்பு” என்ற பெயரில் 8.2% வட்டி வழங்கக் கூடிய சிறப்பான திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், ஆண் குழந்தைகளுக்கு என்று பொன்மகன் சேமிப்பு என்ற பெயரில் திட்டம் உள்ளது தகவல் பலருக்கும் தெரிவதில்லை.
கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் 10 வயது நிரம்பிய ஒரு ஆண் குழந்தைக்கு தனி கணக்கு தொடங்கி முதலீடு செய்ய முடியும். 10 வயதிற்கு குறைவான ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் உதவியுடன் பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். ரூ.500 செலுத்தி இத்திட்டத்திற்கான பாஸ்புக்கையும் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்திற்கான குறைந்தபட்ச வருடாந்திர வைப்பு தொகை ரூ.500 ஆகும். அதிகபட்ச வைப்பு தொகை ரூ.1.5 லட்சமாகும். 15 ஆண்டுகள் முதலீடு செய்ய கூடிய இத்திட்டத்திற்கு தற்போது 7.6% வட்டி வழங்கப்படுகிறது. ஆண் குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பிய உடன் முதலீட்டு தொகை + வட்டி தொகை வழங்கப்படும்.
இருந்தாலும், ஒவ்வொரு நிதிக் காலாண்டு அதாவது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி மாற்றியமைக்கப்படும். மத்திய நிதியமைச்சகத்தால் மாற்றப்படும் வட்டி விகிதங்களை அஞ்சலகங்களிலோ அல்லது இந்தியா போஸ்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ (Post Office Saving Schemes (indiapost.gov.in) அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பான் அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம், முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து போஸ்ட் ஆபீஸில் சமர்ப்பித்து கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். இத்திட்டத்தில், நீங்கள் தங்கள் குழந்தை பெயரில் மாதந்தோறும் ரூ.1,000 அல்லது ஆண்டுக்கு ரூ.12,000 செலுத்தி வருகிறீர்கள் என்றால், 15 வருட முடிவில் 1.83 லட்சம் முதிர்வு தொகை பெறலாம்.
Read More : அரிசி விலை உயரும் அபாயம்..!! 5% ஜிஎஸ்டி..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!