குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மீந்த சாதத்தை சூடுபடுத்தி சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளோம். மிச்சம் இருக்கும் அரிசியை உண்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மீந்த அரிசி உணவுகளை நீங்கள் சரியாக சேமிக்கவில்லை என்றால், பின்னர் சாப்பிடும்போது என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து தெரிந்துகொள்வோம். பழைய சாதம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சமைத்த அரிசியை 2-3 மணி நேரம் அப்படியே வைக்கும் போது, அரிசியில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள், பூஞ்சை, பாக்டீரியாக்கள் உருவாகத் தொடங்கி வேகமாகப் பெருக்கத் தொடங்கும். அரிசி உணவில் பாக்டீரியா மற்றும் தீங்கு விளைவிக்கும் துகள்கள் மிக விரைவாக வளரும் என ஆய்வுகள் கூறுகிறது. இதை நாம் சாப்பிடும் போது, அரிசி விஷமாகி வயிற்றில் நச்சுக்களை உற்பத்தி செய்கிறது. இதனால் பல வகையான பிரச்சனைகள் ஏற்படும்.

பழைய சாதத்தை சூடுபடுத்தி சாப்பிடுவதால் குமட்டல் மற்றும் வாந்தி. வயிற்றுப்போக்கு ஏற்படலாம். வாயுத்தொல்லை அல்லது அசிடிட்டி. வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளும் வரலாம். எஞ்சியிருக்கும் அரிசியை குளிர்சாதனப்பெட்டியில் சரியாக சேமித்து வைப்பதன் மூலம் நோய்களை தவிர்க்கலாம். நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் நேரம். நீங்கள் அரிசியை சரியான நேரத்தில் குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டும். அரிசி தயாரித்த பிறகு, அதை ஒரு கொள்கலனில் வைத்து 2 மணி நேரத்திற்குள் குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டும். இதன் மூலம் அரிசி கெட்டுப் போகாமல் காப்பாற்றலாம்.

பிளாஸ்டிக் டப்பாவில் மீந்து போன உணவை வைத்து பிரிட்ஜில் சேமிப்பது நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் டப்பாவை பயன்படுத்துவதால் பல தீமைகள் ஏற்படுகின்றன. ஏனென்றால் பிளாஸ்டிக் டப்பாக்களில் சூடான உணவுகளை வைக்கும்போது, ​அவை நம்முடைய ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) போன்ற குறிப்பிட்ட வகையான பிளாஸ்டிக் பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இந்த கொள்கலன்கள் பொதுவான பிளாஸ்டிக் பாத்திரங்களிலிருந்து சற்று வேறுபடுகின்றன. இவை கூடுமான வரைக்கும் நமது ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்காத பாதுகாப்பான விருப்பங்களாக கருதப்படுகின்றன. பிளாஸ்டிக் பாத்திரங்களை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அடிக்கடி பிளாஸ்டிக் டப்பாவில் உணவை பரிமாறும்போது ரசாயனங்கள் நமது உணவில் கலந்து, அதன் தரத்தை மாற்றி, நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். பிளாஸ்டிக் பாத்திரங்களை தவறாமல் அடிக்கடி மாற்ற வேண்டும். இப்படி செய்வதால் நீண்ட கால பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கமுடியும்.

Readmore: தம்பி தம்பின்னு கூப்பிட்டு ஆளையே கவுத்துட்டாளே!. உல்லாசத்துக்காக 15 வயது சிறுவனுடன் ஓட்டம்!. 2 குழந்தைகளின் தாயை கையும் களவுமாக பிடித்த போலீஸ்!