காதுகளில் உள்ள அழுக்கை சுத்தப்படுத்துவதற்காக காட்டன் பட்ஸ்களை பயன்படுத்தக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

காதுக்குள் அழுக்கு, தூசி, சின்ன சின்ன மாசு துகள்கள் சென்று சவ்வை சேதப்படுத்துவதை தவிர்ப்பதற்காக பசை போன்ற ஒருவகை திரவத்தை சுரக்கிறது. வெளிப்புற காது ஓட்டையில் சுரக்கும் மொழுகு போன்ற திரவம் தான் காதுமெழுகு என அழைக்கப்படுகிறது. இந்த திரவம் காது துளைகளில் இருக்கும் தோலைப் பாதுகாப்பதோடு, நீர், பூச்சிகள் மற்றும் பிற பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள், வெளிப்புற தூசு, மாசு போன்றவற்றிக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.

இது பார்ப்பதற்கு அருவெறுப்பாக இருந்தாலும், காதுமெழுகு மூலமாக அதன் உட்புறத்திற்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. காதின் உட்புற தோலை பாதுகாக்கவும், தூசு, துகள்கள் ஆகியவற்றால் சேதமடைவதை தடுக்கவும் உதவுகிறது.அனைவருக்கும் காது மெழுகு உற்பத்தியாவது இயல்பான ஒன்று தான். காதுகளை வெளிப்புற அசுத்தங்களில் இருந்து பாதுகாப்பதற்காக செருமன் பயன்பட்டாலும், அதனை அவ்வப்போது நீக்க வேண்டும். இல்லையெல், காது கேட்கும் திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆனால் காதுகளில் உள்ள அழுக்கை சுத்தப்படுத்துவதற்காக காட்டன் பட்ஸ்களை பயன்படுத்தக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் காதுகளில் உள்ள மெழுகை சுத்தம் செய்ய இயர்பட்ஸைப் பயன்படுத்தும் போது அது செருமனை காதுக்குள் ஆழமான பகுதிக்கு தள்ளக்கூடும் என்றும், இதனால் செவித்திறன் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் காதுக்குழாய் வழியாக பட்ஸை விடும் போது, நாம் கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக காதில் நோய் தொற்று தாக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மேலும் காதில் பட்ஸ் போன்ற கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவதால், காயம், தொற்று, ரத்தக்கசிவு மற்றும் செவிப்பறையில் துளையிடுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே காதில் அதிகப்படியாக சேர்ந்துள்ள மெழுகை நீக்க நினைத்தால் நிபுணர் பரிந்துரைக்கக்கூடிய சொட்டு மருந்துகள் போன்றவைகளை பின்பற்றி காதுக்கு உள்ளே உள்ள மெழுகை சுத்தம் செய்வது நல்லது.

Readmore: பல ஊர்; பல பெயர்!. வடிவேலு காமெடிபோல், 4 ஆண்களை சுத்தலில் விட்ட பெண்!. வாக்குமூலத்தில் பகீர் தகவல்!