தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் சேலம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை வைக்க விரும்புவோர் வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை என்றாலே தமிழ்நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே சமயம் புத்தாடைகள் உடுத்துவது, பட்டாசுகள் வெடிப்பது என பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். ஆகையால் பல்வேறு இடங்களில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைத்து விதவிதமான பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதும் வழக்கம். அந்த வகையில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான கட்டுப்பாடுகளை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படும்.

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை வைக்க விரும்புவோர் வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார். சேலம் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட இடங்களைத் தவிா்த்து, வெடிபொருள் சட்டமும், விதிகளும் 1884, வெடிபொருள் சட்டம் 2008-இன் கீழ் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் வரும் 21-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அருகில் உள்ள இ-சேவை அல்லது பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: சிலிண்டரில் கேஸ் கசிகிறதா?. உடனடியாக இவற்றைச் செய்யுங்கள்!.