இந்தியாவுக்கு பயணம் செய்யும் அமெரிக்க மக்கள், ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளான ஜம்மு – காஷ்மீரீல் நக்சலைட்டுகள் புழக்கம் அதிகளவில் இருப்பதால், நாட்டு மக்களுக்கு அமெரிக்கா முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதுதொடர்பான எச்சரிக்கையில், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதம் மற்றும் குற்றம் அதிகம் காணப்படுவதால், அந்தப் பகுதிகளுக்கு செல்வோர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சில பகுதிகளில் மிக அதிகமான அபாயம் உள்ளது.
குறிப்பாக, இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீர் பகுதிக்கு பயணம் செய்ய வேண்டாம். அந்த பகுதிகள் தீவிரவாதம் மற்றும் பொது அமைதி கேள்விக்குறியான நிலையில் உள்ளது. இதேபோல் மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளான மணிப்பூர் பகுதிக்கும் செல்ல வேண்டாம். அங்கு வன்முறை மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகம் உள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களில் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக உள்ளது.
எனவே சுற்றுலா தளங்கள், பேருந்து, விமானம், ரயில் நிலையங்கள், சந்தை பகுதிகள், அரசு சேவை வழங்கும் பகுதிகளில் சுற்றுலா வரும் பயணிகளை சில சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால், கவனமாக இருக்க வேண்டும்” என எச்சரித்துள்ளது.
Read More : Income Tax | இனி வாட்ஸ் அப்பில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்..!! எப்படி தெரியுமா..?