தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழை பெய்கையில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளநிலையில், ஆங்காங்கே மழைபெய்து வருகிறது. அது போல் வெயிலும் மாறி மாறி இருந்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழை பெய்கையில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, மழை பெய்கையில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகில் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உடனடி உதவிக்காக 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Readmore: மோசடி செய்த உயரதிகாரிகளை போட்டுக் கொடுத்த இளைஞர்..!! பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்து தீர்த்துக்கட்டிய மேலாளர்..!! சேலத்தில் பகீர்..!!