தெரு நாய்களால் ஏற்படும் காயங்கள் மற்றும் இறப்புகள் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். தெருவில் ஒரு நாய் தாக்கும் போது, ஒரு நபர் மிகவும் பயந்து என்ன நடக்கிறது என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. நாய்கள் பொதுவாக மனிதர்களையோ அல்லது பிற விலங்குகளையோ கோபமாக இருக்கும்போது மட்டுமே தாக்கும். நாய்கள் சில சமயங்களில் நம்பமுடியாத அளவிற்கு கோபமடைந்து ஒரு நபரை தாக்குவதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். ஆனால் அதன் பின்னணியில் உள்ள ரகசியம் யாருக்கும் தெரியாது.

இதுமட்டுமல்லாமல், நாய்கள் இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் துரத்தும். அதற்கு என்ன காரணம் என்றால், அதனிடம் இருக்கும் மொப்ப சக்திதான் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, சில சமயங்களில் வாகன டயர்கள் மீது நாய்கள் சிறுநீர் கழித்திருக்கும், அதன் வாசனை டயரில் இருப்பதால், அதனை மோப்பம் பிடிக்கின்றன. இதனால் நம்முடைய இடத்திற்கு வேறு நாய்கள் வருகிறது என்ற எச்சரிக்கை உணர்வால்தான் இருசக்கர வாகனம், கார்களுக்குப் பின்னால் நாய்கள் துரத்துகின்றன என்று கூறப்படுகிறது.

அதாவது ஒவ்வொரு நாய்களுமே தங்களுக்கென்று தனி பகுதியை வைத்துக் கொள்ள விரும்புவதே மற்ற நாய்களை தங்களுடைய பகுதிக்குள் அனுமதிக்காமல் விரட்டுகின்றன. இதுமட்டுமல்லாமல், அதிக சத்தத்துடன் ஹாரன் அடிப்பது, வேகமாக இயக்குவது ஆகியவையும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

Readmore: குமாரபாளையம் ஜல்லிக்கட்டு..!! இளைஞரின் தொண்டையை குத்திக் கிழித்த காளை..!! கடைசியில் நேர்ந்த சோகம்..!!