சேலம் மாவட்டம் கொங்கணாபுரததில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “திமுக., அதன் கூட்டணியை நம்பி மட்டுமே உள்ளது. கூட்டணி தலைவர்கள் கைவிட்டால் விழுந்துவிடும். திமுக ஆட்சிக்கு வந்து மக்களுக்கு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார். சேலம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கால்நடை பூங்காவை கூட இன்னும் திறக்கவில்லை என்று விமர்சித்தார்.

உதயநிதி ஸ்டாலின் உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளார். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல் தான் உண்மையான தேர்தல், பைனல் மேட்ச், அதில் அதிமுக தான் வெற்றிபெறும் . திமுக விளையாட்டை ஆரம்பித்துவிட்டீர்கள், அந்த விளையாட்டுக்கான கோப்பையை அதிமுகதான் வெல்லும் என்றும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணி குறித்தும் சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழை நீர் வடிகால் பணிகள் குறித்தும் விமர்சித்துள்ளார். திமுக கூட்டணிக்குள் தற்போதே புகைச்சல் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி குறித்து கூற முடியும் என்றும் அதிமுக தலைமையில் கூட்டணி சிறப்பாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் திமுக கூட்டணிக்குள் புகைய ஆரம்பித்துள்ளதாகவும், தேர்தல் வரை திமுக கூட்டணி இருக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Read More : அலெர்ட்!. உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!. புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!