தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை சார்பில் மளிகைப்பொருட்கள் அடங்கிய “தீபாவளி சிறப்புத் தொகுப்பு” விற்பனை வரும் 28ஆம் தேதி தொடங்கும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். இந்த மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு பிரீமியம் (Premium) மற்றும் எலைட் (Ellte) என இரண்டு வகைகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, பிரீமியம் (Premium) தொகுப்பில், துவரம் பருப்பு 200 கிராம், உளுத்தம் பருப்பு 200 கிராம், கடலை பருப்பு 200 கிராம், வறுகடலை 100 கிராம், நீட்டு மிளகாய் 100 கிராம், மிளகு 25 கிராம், கடுகு 50 கிராம், சோம்பு 50 கிராம், தனியா 100 கிராம், சீரகம் 25 கிராம், வெந்தயம் 50 கிராம், புளி 100 கிராம், ரவை 100 கிராம், ஏலக்காய் 5 கிராம் என 14 வகையான பொருட்கள் ரூ.199 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேபோல், எலைட் (Elite) தொகுப்பில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு தலா 250 கிராம், வறுகடலை 200 கிராம், மிளகு 50 கிராம், சீரகம் 50 கிராம், தனியா 200 கிராம், சோம்பு 50 கிராம், நீட்டு மிளகாய் 250 கிராம், புளி 100 கிராம், ரவை 100 கிராம், வெந்தயம் 50 கிராம், கடுகு 50 கிராம், ஏலக்காய் 5 கிராம் என 14 வகையான பொருட்கள் ரூ.299- என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

மளிகைப் பொருட்கள் மட்டுமின்றி, தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையில் அதிரசம்-முறுக்கு காம்போ விற்பனையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிரசம்-முறுக்கு காம்போ தொகுப்பில் பச்சரிசி மாவு 500 கிராம், பாகு வெல்லம் 500 கிராம், மைதா மாவு 500 கிராம், ஏலக்காய் 5 கிராம், Sunland/Goldwinner Sunflower Oil 1/2 லிட்டர் என 5 வகையான பொருட்கள் ரூ.190 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன.

இந்த தீபாவளி தொகுப்புகள் அனைத்தும் வெளி சந்தையில் கிடைப்பதை விட குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. எனவே, கூட்டுறவுத் துறையின் மூலம் ”கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற பெயரில் அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகளிலும் தீபாவளி சிறப்புத் தொகுப்பை மக்கள் வாங்கிக் கொள்ளலாம் என அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Read More : 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் திருப்பதி மலைக்கு வர வேண்டாம்..!! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!