சேலத்தில் உள்ள கடை வீதி கோ-ஆப்டெக்ஸ் ஷோரூமில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் ஆப் டெக்ஸ் நிறுவனம் 1935 முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து 89 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு கைத்தறி நெசவாளர் முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலும் தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்குவதற்காகவும் விழாக்காலங்களில் 30% வரை அரசு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் டவுன் கடை வீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் ஷோரூமில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி தொடங்கி வைத்து முதல் கொள்முதல் செய்தார். மேலும், புதிய வடிவமைப்புகளில் அசல் பட்டுடன் கூடிய சேலம் பட்டுப்புடவைகள், புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், ஏராளமாக குவிந்துள்ளன.

கோவை, மதுரை, பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள் புதிய வடிவிலும், ஆர்கானிக் மற்றும் களம் காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களில் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Readmore: சட்டவிரோத ஆக்கிரமிப்பு!. எடப்பாடியில் ரூ.15 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு!. இந்து சமய அறநிலையத் துறை அதிரடி!