திரையுலகில் தற்போது, வெற்றிப்பட விமர்சனங்களைவிட விவாகரத்து சம்பவங்களே அதிகம் பேசுப்பொருளாகிவருகிறது. அந்தவகையில், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என்று அடுத்தடுத்து மனைவியை விவாகரத்து செய்தனர். சமீபத்தில், நடிகர் ஜெயம் ரவியும் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்திருந்தார். தற்போது ‘இந்தியன்’ பட நடிகை ஊர்மிளாவும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படத்தில் சப்னா என்ற கேரக்டரில் ஊர்மிளா இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்தார்.
50 வயதாகும் ஊர்மிளாவும், அவரது கணவரும் திருமணத்திற்கு முன்பு சில காலம் ஒன்றாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஊர்மிளாவை விட மல்ஹோத்ரா 10 வயது இளையவர். இருப்பினும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது பாலிவுட்டில் அப்போது பேசப்பட்டது. ஆனால் தற்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மும்பை நீதிமன்றத்தில் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி ஊர்மிளா மனு தாக்கல் செய்துள்ளார். ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஊர்மிளா இந்த விவாகரத்து மனுவை தாக்கல் செய்துள்ளார்.