துணை முதல்வர் என்பது பதவி அல்ல, எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்பு என்றும் என் மீது வைக்கப்படும் விமர்சனங்களை உள்வாங்கிக் கொண்டு, எனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. ஆளுநர் என்.ரவி ஒப்புதல் படி, துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜி, சேலம் ஆர்.ராஜேந்திரன், கோவி.செழியன், சா.மு.நாசர் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார்.
இதையடுத்து, இன்று பதவியேற்பதற்கு முன்னதாக, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. செந்தில் பாலாஜி, சேலம் ஆர். ராஜேந்திரன், கோவி. செழியன், சா.மு.நாசர் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். ஆளுநர் ரவி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக, அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “துணை முதல்வர் என்பது பதவி அல்ல, எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்பு. என் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வரவேற்கிறேன். அதை உள்வாங்கிக் கொண்டு, எனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது பணியை செய்து வருகிறேன். முதலமைச்சர், மூத்த அமைச்சர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவேன்.” என்று கூறினார்.
Readmore: தேர்வு விடுமுறை!. காலையிலேயே களைகட்டிய ஏற்காடு!. அலைமோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்!