தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ஒரு கார் பிரியர் என்பதைவிட கார் வெறியர் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும், சினிமாவில் நடிக்கவருவதற்கு முன்பாக பார்முலா ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார் அஜித் குமார். அஜித் ஒரு கார் பிரியர் என்பதால் அவரது படத்திலும் கார் அல்லது பைக் ஓட்டும் மாஸ் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்று விடும்.

நடிகர் அஜித்தை போல வேறு யாராலும் கார் ஓட்ட முடியாது என்று பலர் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறோம். அந்த அளவிற்கு தல கார் ஓட்டுவதில் கில்லாடி. அஜித் வீட்டின் கராஜில் பல வகையான பைக் மற்றும் கார் நின்றுகொண்டிருக்கும். ஆனால், பெரும்பாலும் அஜித் வெளியில் சென்றால் அவர் சிகப்பு நிற சிப்ட் அல்லது வெள்ளை நிற இன்னோவா காரில் தான் பயணம் செய்வார். அஜித்திற்கு பைக் ரேஸ், கார் ரேஸில் தான் ஆர்வம் அதிகம் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். படப்பிடிப்பு முடிந்தவுடன் பைக்கை எடுத்துக்கொண்டு பைக்கில் டூர் கிளம்பி விடுவாராம்.

அவருடைய அனைத்து படத்திலும் ஒரு சீனாவது பைக் ரேஸ் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்று இருக்கும், சூப்பர் ஹிட்டான துணிவு படத்தில், சூப்பர் ரேஸ் ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது. அதை தல அஜித்தே செய்திருந்தார். பலமுறை பைக் விபத்துளை சந்தித்து இருக்கிறார் அஜித், அவருக்கு உடம்பில் பல முறை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் அவர் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜன் செல்ல விமான நிலையம் வந்த போதும், கால் வலியால் தாங்கி தாங்கி நடந்து வந்ததை பார்க்க முடிந்தது. என்னத்தான் ஆனாலும், தனக்கு விருப்பமான பைக் ரைடிங்கை நடிகர் அஜித் விடவே இல்லை.

இந்நிலையில் அஜித் மீண்டும் கார் ரேஸில் ஈடுபட உள்ளார் என்று வெளியாகி இருக்கும் தகவலால் ரசிகர்களை உற்சாகமாகியுள்ளனர். 2025ம் ஆண்டு நடக்க உள்ள European GT championship கார் பந்தய போட்டியில் அஜித் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக பிரபல கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், ”ஐரோப்பிய ஜிடி ரேஸிங் போட்டியில் அஜித் பங்கேற்க உள்ளார். அவர் உண்மையில் ஒரு லெஜண்ட். கார் பந்தயத்தில் அனுபவம் இல்லை என்றாலும், கேரியரை தாமதமாக தொடங்கினாலும் கார் ரேஸிலும் அஜித் தனித்துவமிக்கவர். அஜித்தின் திறமைக்கு எல்லையே இல்லை. அவர் சிறந்த மனிதநேயர். ஆல் தி பெஸ்ட் தல. கார் பந்தயத்தில் நான் உங்களுக்கு வழிகாட்டியாக இருந்தால் அது எனக்கு பாக்கியமாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.

Readmore: லட்டு விவகாரம்!. நானும் வெங்கடேசப் பெருமானின் பக்தன்தான்!. மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி!