ஆவின் பால் பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ரேஷன் கடைகள் மூலம் ஆவின் பொருட்களை விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மாதத்தில் ஒரு சில புதிய ப்ராடக்ட்கள் உருவாக்க இருக்கிறோம். இதுவரை இல்லாத அளவுக்கு பால் கொள்முதல் செய்திருக்கிறோம். பாலின் அளவு குறையாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ரேஷன் கடையில் பால் விற்பனை அல்ல, பாலில் தயாரிக்கப்பட்ட பொருட்களைத்தான் விற்பனை செய்ய இருக்கிறோம். அது எந்த அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. கூடிய விரைவில் ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் கொண்டுவரப்படும். பணிக்கு வரக்கூடிய பெண்களின் பாதுகாப்பை கண்காணித்து வருகிறோம். அனைத்து விழா நாட்களிலும் விலை குறைவாக பொருட்கள் விற்கப்படும். பொருளின் தரத்தை உயர்த்தி அதிகளவில் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
Read More : கடைசி நேரத்தில் காதலனுடன் ஓடிப்போன மணப்பெண்..!! இது ஒன்றும் குற்றம் கிடையாது..!! உயர்நீதிமன்றம் உத்தரவு..!!