இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை அறைக்கு துணியால் கட்டி இழுத்துச் சென்ற அவல சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் பிரேத பரிசோதனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், இறந்தவரின் உடலை துணியால் முகத்தை மூடி, கால்களை கட்டி பிரேத பரிசோதனை கூடத்திற்கு இழுத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. உடலை இழுத்து சென்ற 2 பேர், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்ற விவரம் சரிவர தெரியவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தில் தொடர்புடைய இருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை, மேலும் இறந்தவரின் அடையாளமும் கண்டறியப்படவில்லை. உடல்சார் தன்மானத்திற்கான உரிமை மற்றும் நடைமுறை சார்ந்த அம்சங்கள் மீறப்பட்டிருப்பதாக சமூக ஊடகப் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இது மிருகத்தனமான குற்றச் செயலின் அங்கம் என்றும் வேதனை கொள்கின்றனர்.

இதுபோன்ற மற்றொரு வழக்கில், அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் விபத்தில் பலியான ஒருவரின் சடலத்தை தவறாக கையாளுவது தொடர்பான வீடியோ வெளியாகி சில நாட்களிலேயே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தகக்து. இதேபோல், ஒருவரின் உடல் சமீபத்தில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் கவனிக்கப்படாமல் விடப்பட்டது. இது எங்கள் எல்லைக்கு உட்பட்டது இல்லை என்று கூறி உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சண்டையிட்ட சம்பவமும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Readmore: ”நீ எங்க கூட அப்படி இருக்கணும்”!. காதலனுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பகீர்!. பணத்தை பறித்துக்கொண்டு உல்லாசமாக இருக்க மிரட்டல்..!!